முல்லாவின் கழுதை
முல்லாவுக்குச் சொந்தமான கழுதை ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் கவலையுற்ற முல்லா, மிகவும் வேதனையுடன் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். இதனைக் கேள்விவுற்ற அவரது நண்பர்கள் பலர் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றினார்கள்.
அப்போது முல்லா'' நண்பர்களே, நான் ஆசையுடன் வளர்த்து வந்த அருமையான கழுதை காணாமல் போய்விட்டது. எவ்வளவு தேடியும் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அதனால்தான் என் மனம் வேதனை அடைகிறது '' என்றார்.
முல்லாவினுடைய இந்தப் பேச்சைக் கேட்ட நண்பர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்து அவரிடம், ''முல்லா அவர்களே, இந்த அற்பக் காரணத்திற்காகவா தாங்கள் இவ்வளவு வேதனை அடைய வேண்டும்.
தங்களுடைய அருமை மனைவியார் இறந்த போதுகூட நீங்கள் இவ்வளவு வேதனை அடையவில்லையே . ஒரு கழுதையைப் பறிகொடுத்ததற்காகவா
தாங்கள் இவ்வளவு சங்கடப்படவேண்டும்'' என அவரது நண்பர்கள் ஆறுதல் கூற அதற்கு முல்லா,
தங்களுடைய அருமை மனைவியார் இறந்த போதுகூட நீங்கள் இவ்வளவு வேதனை அடையவில்லையே . ஒரு கழுதையைப் பறிகொடுத்ததற்காகவா
தாங்கள் இவ்வளவு சங்கடப்படவேண்டும்'' என அவரது நண்பர்கள் ஆறுதல் கூற அதற்கு முல்லா,
'' அருமை நண்பர்களே ,என் முதல் மனைவி இறந்தபோது, எனக்கு ஆறுதல் கூறி எனக்கு புதுவாழ்வு அமைத்துத்தர பெரும் முயற்சி எடுத்து எனக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து மறுமணம் செய்து வைத்தீர்கள்.
ஆனால், இப்பொழுது நான் எனது அருமைக் கழுதையை இழந்து சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நீங்களெல்லாம் என்னைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்லி, ஒரு புதுக் கழுதையை வாங்கிக்கொடுக்க முன் வரவில்லையே, என்பதை நினைக்கும் பொழுதுதான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது'' என்றார்.
.jpg)
