சிறுவர் கதைகள்

           


                                                                            காய் இல்லாத மரம்    



                 
அரசர் கிருஷ்ணதேவராயரின்  அவைக்கு  ஒரு நபர் வந்தார். 
                            அவர் அரசரிடம்,

       “அரசே! என்னுடைய வயலும் பக்கத்துவீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் 
இடையில்  உள்ளவரப்பில்,ஒருதென்னைமரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்றுவிட்டார். நான் தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன்.

இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக்கூடாது என்றார்.
இப்போது அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டு விட்டாராம்.
மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்...என்றுமுறையிட்டார்.

அதைக்கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர்.

அமைச்சர் சொன்னார்.அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து
வந்து சிறையில்அடைக்கவேண்டும்என்றார்.

அதற்குள் சேனாதிபதி,அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகிவிட்டார்.

அப்போது அரசர்"என்ன செய்யலாம்?"என்று கேட்பதைப் போல்
தெனாலிராமனைப் பார்த்தார்.

தெனாலிராமன் புரிந்துகொண்டு,“தாங்கள் அனுமதிதந்தால்,இதற்கான தீர்வைநாளைக்குத்தள்ளிவைத்துக்கொள்ளலாம்...என்றார்.

அரசர்,“சரிஎனவே,தெனாலி அந்த நபரிடம்,“நாளைக்கு உன்பக்கத்து
வீட்டுக்காரனையும் அழைத்துவா...என்று அவனை அனுப்பிவிட்டார்.

மறுநாள் அந்தநபரும்,பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர்.

இருவரிடமும் நன்கு விசாரித்தபிறகு தெனாலிராமன் சொன்னார்.

அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ள விரும்புகிறாய்
இல்லையா?”என்றார். அதற்கு அவன்,“ஆம்ஐயா!என்றான்.

சரி,நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு...
என்றார்தெனாலிராமன். அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான்.

சபையினருக்குஒன்றும்புரியவில்லை.

தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?”என்று திகைத்தனர்.

பிறகு தெனாலி,மரத்தை வாங்கியவரிடம்,“சரி...இன்றிலிருந்து அந்த மரம்
உன்னுடையது இல்லை...என்றார். அந்த மனிதரிடம் ஏமாற்றம்.

அப்போது தெனாலிராமன் தொடர்ந்து,“இன்னொரு விஷயம்...
அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ
திரும்பக் கொடுத்துவிட வேண்டும்...என்று கூறி விளக்கினார்.

அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும் போது அம்மரம் காய்க்கத்
தொடங்கவில்லை.ஆகவே,அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு
எல்லாக் காய்களையும் பறித்துக்கொண்டு விடு...என்றார் வாங்கியவரிடம்.

திரும்பப்பெற்றவரிடம்,“காய் இல்லாத மரத்தைத் தானே நீ விற்றாய்...?

ஆகவே,என்றைக்கும் காயில்லாத மரம் தான் உன்னுடையது.
அதில் இனி மேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக்
கொடுத்தவரையே சேரும்...அதை அவர் பறித்துக் கொள்ள அவ்வப்போது
நீ அனுமதிக்கவேண்டும் தடுக்கக்கூடாது;நீயும் பறித்துக்கொள்ளக்கூடாது...
என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார்.

திரும்பப்பெற்றவன் முகத்தில் ஏமாற்றம்.

புகார் கொடுத்த நபர்மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக,தெனாலிராமனை
வணங்கிவிட்டு  விடைபெற்று சென்றார்.