சிந்திக்க ஒரு செய்தி

மனதை அடக்கப் பழகுங்கள்

வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.

* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.

* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை உன்னை சோதனைக்குள்ளாக்கும்.

* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

மனத்தூய்மையுடன் செய்யும் செயல்களால் ஏற்படும் புண்ணியம், ஒருவனை நிழல் போல தொடர்ந்து வரும். * அங்குசத்தால் பாகன் யானையை அடக்குவது போல, அறிவால் மனதை அடக்கப் பழகுங்கள். *

அக்கறையின்றிச் செய்யும் எந்தச் செயலாலும் பலனேதும் உண்டாகாது. போதனை செய்யும் முன், முதலில் தன்னை பண்படுத்திக்கொள் ...

வேண்டாதவற்றை கடல் அலைகள், கரையில் தள்ளி விடுவது போல, ஒழுக்கம் அற்றவரின் நட்பை அறவே ஒதுக்கி விடுவது நல்லது.

* அறிவின் துணை கொண்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும். வீண் ஆராய்ச்சியில் காலத்தை விரயமாக்க கூடாது.

* வெளித்தோற்றம் பற்றிய கவலை வேண்டாம். ஆனால், உள்ளம் எப்போதும் தூய்மையுடன் இருக்கட்டும்.

* காலம் காலமாக சொல்லப்பட்டது என்பதற்காக, ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

                                                                                      - புத்தர்