ஆன்மிகம்


 தோப்புக்கரணம் வந்த கதை


   கஜமுகன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்துஅதன் வாயிலாக அவரிடம் இருந்து பெற்றிருந்தான், பெற்ற வரத்தால் ஏற்பட்ட கர்வம்  அவனை தடம் மாறச் செய்தது. தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவர்களை சிறுவர்களைப் போல பாவித்து தண்டனை வழங்கினான். தேவர்கள் அனைவரையும்  தனக்கு முன்னால் வரச்செய்து, காதுகளை கரங்களால் பற்றிக்கொண்டு ஆயிரத்து எட்டு தோப்புக்காரணம்  போடச்சொன்னான்.

   இந்த தண்டனை காலை, உச்சி மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் நிறைவேற்றப்பட்டது அத்தோடு இருகரங்களையும்  நெற்றியில் குட்டிக்கொள்ள வேண்டும் என்றும் தேவர்களுக்கு,அசுரன் ஆணையிட்டான்.தங்களின் துன்பத்தை போக்கும்படி தேவர்களுக்கு, அசுரன் ஆணையிட்டான்.

           தங்களின் துன்பத்தை போக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், கஜமுகனை அழிப்பதற்காக தன் மகனான விநாயகரை அனுப்பினார். கஜமுகனுக்கும், விநாயகருக்கும் நடந்த போரில் கஜமுகன் படை அழிந்து, ஆனால் அவனை அழிக்க  முடியவில்லை,

   காரணம் என்னவென்றால், எந்த ஆயுத்தாலும் அழியாத வரத்தை அவன் பெற்றிருந்தான்அதை உணர்ந்து கொண்ட விநாயகர் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து, சிவ மந்திரத்தை உச்சரித்து ஏவினார். இதில் கஜமுகனின் அசுர உருவம் அழிந்து பெரிய  எலியின் உருவம் கொண்டான். அந்த எலியின் மீது விநாயகர் அருள்பார்வை பார்த்தார். அந்தப் பார்வையில் விநாயகரின் பாதத்தில் சரணடைந்தான்  கஜமுகன், அந்த எலியின் தனது வாகனமாக மாற்றிக்கொண்டார் விநாயகப்பெருமான்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள், அசுரனிடம் தாங்கள் தண்டனையாக செய்த தோப்புக்கரணத்தையும், நெற்றியில் குட்டிடும் செய்கையையும்,
நன்றியுடன் விநாயகப்பெருமானுக்கு செய்தனர்.

விநாயகரின் முன்பாக நின்று நெற்றியில்  குட்டி, தோப்புக்கரணம் போட்டால் நினைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

ஆன்மிகமும் அறிவியலும்: 

இந்து மதம் பல சிறந்த தத்துவங்களை தன்னகத்தே கொண்டது,விநாயகருக்கு  முன் நெற்றியில் குட்டுவதன் மூலம், குண்டலின் சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. அதனால் உடலில் சுறுசுறுப்பு எற்படும். தொடர்ந்து இறை வழிபாட்டில் ஈடுபடுவற்கு மனதை கட்டுப்படுத்துகிறது இதைத் தவிர நெற்றிப் பொட்டில் உடலின் சகல நரம்புகளும் சேருவதால் அங்கே குட்டிக் கொள்வது உடலுக்கு
நல்லது