மலர்களும் மருத்துவமும்
நாம், மலர்களின் அழகையும், அவற்றின் வண்ணங்களையும் மணத்தையும்
மட்டும் ரசிக்கிறோம், அவற்றை அலங்காரத்துக்குப் பயன்படுத்துகிறோம்.
இப்படி
மலர்களை வேறு கோணத்தில் பார்க்கும்
நமக்கு, அவற்றின் மருத்துவ குணங்கள் தெரிவதில்லை,
தெரிந்தாலும் அவற்றை
எப்படி உபயோகிப்பது
என்ற சந்தேகத்திலேயே அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.
இங்கே சில மலர்களின் மருத்துவக் குணங்களை விவரித்திருக்கிறோம்......
ஆவாரம்
பூ
இயற்கையாக
எல்லா இடங்களிலும் காணப்படும் ஆவாரம் பூ அனேக நன்மைகளைக் கொண்டது. ரத்ததுக்கு மிகவும் பயன் தரும்
ஆவாரம் பூவை
உலர்த்தி, வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால்,
சர்க்கரை கலந்து பருகிவர உடல் சூடு, நீரிழிவு நீர்க்கடுப்பு
போன்ற நோய்கள் தீரும். ஆவாரம் பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன்
கூட்டி, உடலில் தேய்த்துக் குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும்.
தோல் வியாதிகளும்
குணமாகும்.
அத்திப்பூ
அத்திப்பூவைச்
சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும்
சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு,
பித்தச்
சூடு நீங்கும்.
நெல்லிப்பூ
உடலுக்கு
குளிர்ச்சி தரும் இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து
கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் மலம் இலகுவாகக்
கழியும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
செம்பருத்திப்பூ
இதய
பலவீனம் அடைந்தவர்கள், அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி
காலையும், மாலையும் குடித்து
வந்தால் இதயம் பலமடையும்.
ரோஜாப்பூ
மலர்களிலேயே
ராஜாவான ரோஜாவின் மணம் மனதுக்கு மட்டுமின்றி, இதயத்துக்கும் வலிமை
தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்க;ளை தூவிக்
குடித்து வாந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். ரத்த விருத்திக்கும்
உதவும் மலர் இது.
வேப்பம்பூ
இது
சிறந்த கிருமிநாசினியாகும்.இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு
கிருமிகள் ஒடிவிடும், உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
முருங்கைப்பூ
ஆண்களுக்கு
ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும்
தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமிகளை
ஒழிக்கக்கூடியது.
மல்லிகைப்பூ
இனிய
மணம் கொண்ட மல்லிகைப்பூவுக்கு கண் பார்வையைக் கூர்மையக்கும் சக்தி உண்டு. மோக உணர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்ட இது,
கிருமிநாசினியாகவும்
செயல்படுகிறது.
குங்குமப்பூ
கர்ப்பிணிப்
பெண்களுக்கு குங்குமப்பூ கொடுப்பது
பாரம்பரியப் பழக்கமாக இருந்து வருகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல்
10 குங்குமப்பூ இதழ்களை பசுப் பாலில் போட்டுக் காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான
நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக
இருக்கவும்
குங்குமப்பூ உதவுகிறது.
,
