மருத்தனும் - இந்திரனும்
முன்னொரு காலத்தில் மருத்தன் என்ற பெயரில் அரசன் ஒருவன் இருந்தான் . தர்மத்தில் தலை சிறந்தவனான அவன் , தன் ஆட்சி மேலும் சிறப்புற வேண்டி ஒரு யாகம் செய்ய நினைத்தான் . தன் யாகத்தைச் செய்துவைக்க குலகுருவான பிருகஸ்பதியிடம் வேண்டினான் . அவரும் சம்மதம் தெரிவிக்கவே; யாகத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக ஆரம்பித்தான்.

பிருகஸ்பதி முனிவர் தேவர்களின் அரசனான இந்திரனுக்கும் குரு ஆவார்.
இந்த நிலையில் ஒருநாள் பிருகஸ்பதி, இந்திரனைப் பார்ப்பதற்காக தேவலோகம் சென்றிருந்தார்.
''வாருங்கள் குருவே! என்ன இப்படிச் செய்து விட்டீர்கள் ? தேவகுருவான நீங்கள் இப்படிச் செய்யலாமா? என்று பிருகஸ்பதியை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்தான் இந்திரன்.
ஒன்றும் புரியாத பிருகஸ்பதி 'என்ன விஷயம் இந்திரா?. நான் என்ன செய்தேன் ? என்று பதிலுக்குக் கேட்க,
இந்திரன் தன் குறையைத் தெரிவித்தான்.
''குருவே! மானிட அரசனான மருத்தனுக்கு யாகம் செய்யவிக்க நீங்கள் ஒப்புதல் அளித்ததாகக் கேள்விப்பட்டேன். அவன் அப்படிச் செய்தால், என் பதவிக்கே அது ஆபத்தாகப் போய்விடும். எனவே தயவுசெய்து நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் ''என்று முறையிட்டான்.

பிருகஸ்பதி முனிவர் யோசித்தார். ''இந்திரன் பேச்சை ஒதுக்கி மருத்தனுக்கு
யாகம் செய்வித்தால், எப்படியும் இந்திரனிடம் இருந்து வருங்காலத்தில் ஏதாவது பிரச்சினை வரும் அவன் சொல்வது போல, மானிடனான மருத்தனுக்கு யாகம் செய்து வைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது'' என்று தீர்மானித்தார்.

''சரி .... இந்திரா! நீ கேட்டுக் கொண்டபடி மருத்தனுக்கு யாகம் செய்துவைக்காமல் இருக்கிறேன். சந்தோஷமா? '' என்றார். இந்திரன் சந்தோஷத்துக்குக் கேட்கவும் வேண்டுமா என்ன!
பிருகஸ்பதி முனிவர் தனக்கு யாகம் செய்து வைக்கப் போவதில்லை என்ற விஷயத்தைக் கேள்விப்பட்ட உடன், மருத்தன் கலங்கினான் . அவரிடம் போய், 'குருவே! தயவு செய்து முடிவை மாற்றிக் கொண்டு, எனக்கு யாகம் செய்து வையுங்கள், என்று கெஞ்சிக் கூத்தாடினான். பிருகஸ்பதி முனிவரும் விடாப்பிடியாக, ''இல்லை மருத்தனே! இந்த யாகத்தைச் செய்து வைக்க
மாட்டேனென்று இந்திரனிடம் வாக்குக் கொடுத்துவிட்டேன். அதிலிருந்து நான் மாறமாட்டேன்' என்றார்.

மருத்தனுக்கு முதலில் தான் கொடுத்த வாக்கு , அப்போது அவர் நினைவுக்கு வரவில்லை போலும் !
வருத்தத்துடன் மருத்தன் அங்கிருந்து அகன்றான்.
அவன் திரும்பிப்போகும் வழியில், நாரதர் எதிரில் வந்தார். நாரதரைக் கண்டதும் , மருத்தன் அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தான். அப்போது அவன் கண்களில் தெரிந்த கலக்கத்தை நாரதர் கவனித்துவிட்டார்.
''மருத்தனே! நல்லாட்சி புரியும் அரசனான உனக்கு ஏனிந்தக் கலக்கம்?. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி ; என்னிடம் சொல் , நான் சரி செய்கிறேன்' என்றார். நாரதர்
கலகம், நன்மையில் முடியுமல்லவா! கலகமே நன்மையில் முடியுமென்றால், அவர் நல்லது செய்கிறேன் எனும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து, மருத்தன் தன் பிரச்சினையை அவரிடம் சொன்னான்.
''இவ்வளவுதானா உன் பிரச்சினை! இதை இப்போதே சுலபமாகத் தீர்த்துவைக்கிறேன். இந்த யாகத்தை நீ சிறப்பாக நடத்துவதற்கு பிருகஸ்பதியை விடச் சிறந்த முனிவர் ஒருவர் இருக்கிறார்' என்றார் .

அது யாரென்று மருத்தனும் ஆவலாகக் கேட்க,
''திசைகளையே ஆடையாக உடுத்திக் கொண்டு திரியும் சம்வர்த்தர் என்ற முனிவர் தான் அவர் . மாபெரும் தவ வலிமையுள்ள அவரைக்கொண்டு நீ யாகம் செய்தால், அது சிறப்பாக முடியும். நீ போய் அவரைத் தொடர்பு கொண்டு , உன் வேண்டு கோளை அவரிடம் வை!''என்றார்.
ஊரும் பேரும் தெரியாமல் திடீரென்று ஒரு முனிவரைப் போய்த் தேடிக் கண்டு பிடித்து, அவரிடம் வேண்டு கோளை வைத்து , அதற்கு அவர் ஒப்புக்கொண்டு..... இதெல்லாம் நடக்கிற காரியாமா? என்று மருத்தனுக்குச் சந்தேகம் வந்தது.
அவன் சந்தேகத்தைப் புரிந்துகொண்ட நாரதர், அதற்கான தீர்வையும் தானே சொன்னார்.
மருத்தனே! அவர் உலகமெங்கும் சுற்றுபவர். எப்போது எங்கிருப்பார் என்றே சொல்லமுடியாது . ஆனால், அடிக்கடி வாரணாசி நகருக்கு வருவார்.
நீ அந்த நகரத்துக்குப்போ. அதன் வாசலில் ஒரு பிணத்தைப் போட்டுக் கொண்டு காத்திரு. எவர் அந்த வழியாகப் போகும் போது அந்தப் பிணத்தைத் திரும்பிப் பார்க்கிறாரோ, அவரே சம்வர்த்தர். அவரிடம் உன் வேண்டுகோளை வை.
தன்னைப் பற்றி உனக்கு யார் சொன்னது என்று அவர் கேட்டால் , ''நாரதர்தான் சொன்னார்' என்று சொல். நீ நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கஎன்னுடைய வாழ்த்துக்கள்' என்று கூறி அவனை ஆசீர்வதித்தார்.
மருத்தனும், புது உத்வேகத்துடன் ''வாரணாசி நோக்கிக் கிளம்பினான்.
நாரதர் சொன்னபடி மருத்தன் வாரணாசி நகரத்தை அடைந்தான் . அந்நகரின் வாசலில் ஒரு பிணத்தைப் போட்டு வைத்து , சம்வர்த்தரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
சில நாட்களில் , ஒரு முனிவர் அந்தப் பக்கமாகப் போகும் போது , அந்தப் பிணத்தைத் திரும்பிப் பார்த்தார். உடனே அவர்தான் சம்வர்த்தர் என்று புரிந்து கொண்ட மருத்தன் அவரை நெருங்கினான். உலக விஷயங்களில் இருந்து விலகியே இருக்க விரும்பும் சம்வர்த்தரோ, தன்னை ஒருவன் நெருங்குவதைக் கண்டு ஒட ஆரம்பித்தார்
அதிர்ச்சி அடைந்த மருத்தன் , சுதாரித்துக்கொண்டு அவரைத் துரத்த , அவரும் நிற்காமல் ஒட, கடைசியில் ஒருவழியாக சம்வர்த்தர் நின்று மருத்தனைப் பார்த்தார்.
''யார் நீ? உனக்கு வேறு வேலையில்லையா? எதற்கு என்னைத் துரத்துகிறாய்?'' என்று அவனைக் கடிந்து கொண்டார். மருத்தன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு யாகம் செய்துவைக்கு மாறு வேண்டுகோள்வைத்தான். யாகமெல்லாம் செய்துவைக்க முடியாது என்று முதலில் மறுத்த சம்வர்த்தர், பின்பு நாரதர் அனுப்பித்தார் , இவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் ஒருவழியாகச் சம்மதித்தார்.
யாகம் செய்யத் தேவையான பொருட்களைப் பற்றிப் பேச்சு வந்தது.

அப்போது சம்வர்த்தரே மருத்தனுக்கு ஒரு யோசனை சொன்னார் .'மருத்தனே இமயமலைச் சாரலில், முஞ்சவான் என்ற ஒரு மலை இருக்கிறது . அதைச் சுற்றிலும் தங்கப் பொடிகள் கொட்டிக்கிடக்கின்றன . மிகவும் அமைதி தவழும் அந்தப் பகுதிக்குச் சிவபெருமான் அடிக்கடி வருவார். நீ சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, அந்தத் தங்கப் பொடிகளை அவர் அனுமதியுடன் எடுத்துக்கொள். அதைக் கொண்டு யாகத்துக்குத் தேவையான பொருட்களைச் செய் '' என்றார்.
மருத்தனும் சம்வர்த்தரின் சொற்படி, சிவபெருமானை நோக்கித் தவம் செய்து , அவர் அருளால் அந்தத் தங்கப் பொடிக்குவியலை அடைந்தான். அதன்பின்னர் உடனடியாக யாகத்துக்குத் தேவையான பொருட்களைச் செய்யும் வேலையில் இறங்கினான்.
இதற்கிடையில், சம்வர்த்தர் மருத்தனுக்கு யாகம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட விஷயம் இந்திரனுக்குத் தெரிய வந்தது . மீண்டும் கலக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது.
தன் குருவான பிருகஸ்பதியிடம் ஆலோசித்து , இந்திரன் ஒரு முடிவு செய்தான். மருத்தனிடம் தூது போகுமாறு அக்னி தேவனுக்கு இந்திரன் கட்டளையிட்டான். அவனிடம் போய்,பிருகஸ்பதி முனிவர் இந்த யாகத்தை நடத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கச் சொன்னான்.
அக்னியும் அதன்படியே மருத்தனைச் சந்தித்து இந்த விஷயத்தைக் கூறினான்.

மருத்தன் சிரித்துக் கொண்டே ''பிருகஸ்பதி முனிவர் தேவர்களுக்கு குரு. சிறப்பு மிக்க அவரை என்னைப் போன்ற மானிடனின் யாகத்துக்காக அழைத்து, அவரைக் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. எனக்கு சம்வர்த்தர் தான் யாகம் செய்து வைப்பார்''என்று சொன்னார்.
அருகிலிருந்த சம்வர்த்தர் மருத்தனின், இந்தக் கிண்டல் பேச்சினால் சிரித்தார். பிருகஸ்பதியே யாகத்தை நடத்து முன் வருகிறார் என்று தெரிந்தும் கூட, தன்னை விட்டுக் கொடுக்காமல் இருந்த அவன் குணத்தினால் மகிழ்ந்தார்.
சம்வர்த்தர் அக்னியைப் பார்த்து , ''இனி ஒரு கணம் நீ இங்கிருந்தாயானால், என் தவ வலிமையால் நெருப்புக்கு அதிபதியான உன்னையே நான் எரித்துவிடுவேன் ''என்று எச்சரித்தார்.
பயந்து போன அக்னி தேவன் , திரும்ப ஒடி வந்து இந்திரனிடம் நடந்த விஷயத்தைச் சொன்னான். கோபம் கொண்ட இந்திரன், மருத்தனை வஜ்ராயுதத்தை எடுத்து கொண்டு மருத்தனைத் தாக்கப் போன சமயம், சம்வர்த்தர் அங்கு வந்தார்.

''இந்திரா உன் வஜ்ராயுதத்தை என் தவ வலிமை கொண்டு தூள் தூளாக்குவேன்.
அதன் பின்பு , உனக்கென்று பெரிதாக ஒரு சக்தியும் இருக்காது. உனக்குத்தைரியமிருந்தால், அதை உபயோகித்துப் பார் என்று சவால் விட்டார்.

சம்வர்த்தரின் தவவலிமையை உண்ர்ந்திருந்த பிருகஸ்பதி , நிலைமையை இந்திரனுக்கு எடுத்துரைத்தார் . சமாதானமாகப் போவதுதான் வழி, என்று சொன்னார்.
இந்திரனும் நிலைமையைப் புரிந்து கொண்டு, யாகத்தைக் கெடுக்கும் முயற்சியைக் கைவிட்டான்.
மருத்தனின் யாகம் வெற்றிகரமாக முடிந்தது.இந்திரன், பிருகஸ்பதி உள்ளிட்டவர்களும் அந்த யாகத்தில் பங்கு கொண்டு , மருத்தனை ஆசிர்வதித்தார்கள்.

யாகத்தை நடத்தி வைத்த சம்வர்த்தர், மருத்தனை வாழ்த்தி விட்டுத் தன் வழியில் கிளம்பினார். யாகத்துக்காகச் செய்யப்பட்ட பொன்னாலான பொருட்கள் மட்டும், அந்த அமைதியான இமயமலைச் சாரலில் ஜொலித்துக் கொண்டிருந்தன .