முல்லா கொண்டு சென்ற கோழிக்குஞ்சு
முல்லா வசித்து வந்த நாட்டின் பக்கத்துக்கு நாட்டிற்கு யாரும் கோழி முட்டைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். இதனால் அந்த நாட்டில் கோழி முட்டைகளுக்கு நாள் விலை கிடைத்து வந்தது.
இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு முல்லா, அந்த நாட்டின் காவலர்களுக்குத் தெரியாமல்,கோழிமுட்டைகளை எடுத்துச் சென்று, விற்பனை செய்து, நல்ல லாபம் அடைந்து வந்தார்.
ஒரு நாள் பக்கத்து நாட்டிற்கு கோழிமுட்டைகளை முல்லா எடுத்து சென்ற போது, அந்த நாட்டு காவலர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள்.உடனே முல்லாவை அழைத்து,
ஒரு நாள் பக்கத்து நாட்டிற்கு கோழிமுட்டைகளை முல்லா எடுத்து சென்ற போது, அந்த நாட்டு காவலர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள்.உடனே முல்லாவை அழைத்து,
''கூடைக்குள் என்ன இருக்கிறது? எனக் கேட்க, ''கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன'' என முல்லா பதிலளிக்க, அதற்கு அந்த காவலர்கள்,
''எங்கள் நாட்டில் கோழி முட்டைகளைத் தான் எடுத்து வரக்கூடாது.கோழிக் குஞ்சுகளை எடுத்து வருவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றாலும்,இன்னும் சிறிது நேரத்தில் பெரிய அதிகாரி வந்து விடுவார், அவர் அனுமதி பெற்று நீங்கள் இந்தக் கோழி குஞ்சுகளை எங்கள் நாட்டிற்குள் எடுத்துச் செல்லலாம் ''என்றனர்.
சற்று நேரத்தில் பெரிய அதிகாரி அங்கு வந்து சேர்ந்தார்.காவலர்கள் அவரை நோக்கி,
சற்று நேரத்தில் பெரிய அதிகாரி அங்கு வந்து சேர்ந்தார்.காவலர்கள் அவரை நோக்கி,
''இந்த பெரிய மனிதர் கோழிக்குஞ்சுகளை நமது நாட்டிற்குள் கொண்டு செல்ல விரும்புகிறார்.முட்டைகளைத்தானே நமது நாட்டிற்குள் எடுத்துச் செல்லக்கூடாது. கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வதில் தடையேதும் இல்லை அல்லவா ? என்றாலும் தங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என்பதற்காகத்தான் இவரை இருக்கச் சொன்னோம்'' என்றார்கள்.
உடனே அதிகாரி, ''கோழிக்குஞ்சுகளை எடுத்துப் போவது சட்டப்படி என்றாலும், கூடைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டியது எங்களுடைய கடமை. அதனால் உங்கள் கூடையைத் திறந்து காண்பியுங்கள் பார்க்கலாம்'' என்றார்.
உடனே முல்லா கூடையைத் திறந்து காண்பித்தார்.கூடைக்குள் கோழிக்குஞ்சுகளுக்குப் பதிலாக கோழி முட்டைகள் இருப்பதைக்கண்டு அதிகாரியும், காவலர்களும் திடுக்கிட்டார்கள்.
உடனே முல்லா கூடையைத் திறந்து காண்பித்தார்.கூடைக்குள் கோழிக்குஞ்சுகளுக்குப் பதிலாக கோழி முட்டைகள் இருப்பதைக்கண்டு அதிகாரியும், காவலர்களும் திடுக்கிட்டார்கள்.
''இவ்வளவு பெரிய மனிதரான நீங்கள் கோழி முட்டைகளைக் கூடையில் வைத்துக் கொண்டு, கோழிக்குஞ்சுகள் இருப்பதாகப் பொய் சொல்லிவிட்டீர்களே'' என்று அந்த அதிகாரி கோபத்தோடு கேட்டார்.
அதற்கு முல்லா, ''அதிகாரி அவர்களே, நான் சொல்வதைச் சற்றுப் பொறுமையுடன் கேட்பீர்களானால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்று உங்களுக்குத் தெரியவரும்.
அதற்கு முல்லா, ''அதிகாரி அவர்களே, நான் சொல்வதைச் சற்றுப் பொறுமையுடன் கேட்பீர்களானால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்று உங்களுக்குத் தெரியவரும்.
கோழிக்குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன?'' எனக் கேட்க அதற்கு அந்த அதிகாரி,
'கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வருகிறது'' என பதிலளித்தார்.
உடனே முல்லா, ''அப்படியென்றால் கோழிமுட்டைக்குள் குஞ்சு அடங்கியிருக்கிறது என்று தானே அர்த்தம்'' என்றார்.