முல்லாவின் கை விளக்கு
முல்லா சாதாரணமாக மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தன்னுடைய கண்பார்வையைப் பற்றி பெருமையாகப் பேசுவது வழக்கம். ''எவ்வளவு கடுமையான இருளிலும் விளக்கின் உதவியில்லாமல் என்னால் எந்த நுண்ணிய பொருளையும் பார்க்கமுடியும்'' என்று முல்லா அடிக்கடி கூறிக் கொள்வார்.
ஒருநாள் முல்லா நல்ல இருட்டு நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் அவரிடம்,
''முல்லா அவர்களே விளக்கில்லாமலே இருளில் எதையும் பார்ப்பேன் என்று கூறுவீர்களே, இப்போது விளக்கோடு நடமாடிக் கொண்டிருக்கிறீர்களே'' என்று கேட்டான்.
அதற்கு முல்லா, ''இளைஞனே ! என்னுடைய சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசமே இருக்காது ! விளக்கின் உதவியில்லாமலே இருட்டில் நன்றாக என்னால் பார்க்கமுடியும். ஆனால், உங்களால் இருட்டில் என்னைப்பார்க்கப் முடியாது அல்லவா ! ஆகவே நான் வருவது தெரியாமல் என் மீது நீங்கள் மோதிவிடாமல் இருக்கவே நான் கையில் விளக்கேந்தி வருகிறேன்'' என்றார்.