முல்லா கதைகள்,
சட்டைக்குள் முல்லா
ஒருநாள் முல்லா தம்முடைய உயரமான வீட்டுசுவரின் மீது, ஓர் ஏணியை சாய்த்து வைத்து அதன் உச்சியில் ஏறி நின்று கொண்டு சுவருக்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தார்.தற்செயலாக ஏணியிலிருந்த அவரது கால் வழுக்கிக்கொள்ளவே முல்லா ஏணியின் உச்சியிலிருந்து ''தடால்'' என்று கீழே விழுந்தார். அவர் விழுந்த சத்தத்தைக் கேட்டு அவருடைய மனைவி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,''என்ன சத்தம்? என்று திகைப்போடு கேட்டார்.கீழே விழுந்து அப்போது தான் எழுந்துகொண்டிருந்த முல்லா,தமது மனைவியை நோக்கி,ஒன்றுமில்லை ஏணியின் உச்சியில் இருந்து கொண்டு சுண்ணாம்பு அடித்தபோது ,என்னுடைய சட்டை கீழே தவறி விழுந்து விட்டது'' என்றார். அதற்கு அவர் மனைவி, சட்டை விழுந்ததினாலா இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது '' என்றார். அதற்கு ''சட்டை விழுந்தது உண்மைதான் ஆனால் ,துரதிருஷ்டவசமாக சட்டைக்குள் என்னுடைய உடல் இருந்து விட்டது ''என்றார் முல்லா.