முல்லா கதைகள்

                                                   

                                               பீரோவுக்குள் ஒளிந்த முல்லா



       ஒரு நாள் நள்ளிரவில் முல்லா மட்டும் தனியாகத்  தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்,வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது இருக்கிறதா,என தேட ஆரம்பித்தார்கள்.அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட முல்லா,வீட்டுக்குள் திருடர்கள் தேடுவதைக் கண்டு, மெதுவாக எழுந்து சப்தம் செய்யாமல் பீரோவுக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டார். 

       பல இடங்களில் தேடியும் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கிடைக்காத திருடர்கள், பீரோவைத் திறக்க அதில் முல்லா ஒளிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.முல்லாவிடம் ஏதோ விலை உயர்ந்த பொருள் இருப்பதனால் தான் அவர் இவ்வாறு மறைந்து இருக்கிறார் என நினைத்த திருடர்கள்,முல்லாவிடம்,
 ''எதற்காக பீரோவுக்குள் ஒளிந்து இருக்கிறீர்கள்? எனக் கேட்க,அதற்க்கு முல்லா,

 ''உங்களைப் போன்ற திருடர்கள் மிகவும் சிரமப்பட்டு என் வீட்டுக்குள் வந்திருக்கும் போது, நீங்கள் எடுத்து போகும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்னிடம் ஏதும்  இல்லாமல் போய்விட்டதே என வெட்கப்பட்டுத்தான் இங்கு ஒளிந்திருக்கிறேன் ''என்றார். இதைக் கேட்ட திருடர்கள் தாங்கள் வந்த வேலையையும் மறந்து வயிறு வலிக்க சிரித்து விட்டுச் சென்றார்கள்.